தாமரை மொட்டின் வெற்றியை அரசியல் தெரிந்தவர்கள் பாரிய வெற்றியென கூறமாட்டார்கள்- நளின்

எல்பிட்டிய தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவினர் பெற்றுக் கொண்ட வெற்றியை, அரசியல் தெரிந்த எவரும் பாரிய வெற்றி எனக் கூறமாட்டார்கள் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்பிட்டிய என்பது இலங்கை அல்ல. அது நாட்டின் சிறியதொரு பகுதியாகும் எனவும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் வெற்றிக் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து ஒட்டுமொத்த மக்களின் நிலைப்பாட்டையும் கணித்துவிட முடியாது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்