பாசிக்குடா பகுதியிலுள்ள ஆறு பாரிய மரங்களின் ஒன்றின் கிளை அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளது

பாசிக்குடா முனைமுருகன் ஆலயத்திலிருக்கும் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் பாரிய கிளைகளை ஆலயத்தின் தலைவரினால் யாரிடமும்  எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டப்பட்டுள்ளது.

இம்மரமானது கடற்கரையிலிருந்து 50 மீற்றருக்கும் குறைவான தூரத்திலேயே உள்ளதோடு சுற்றுளாத்தலமான பாசிக்குடாவில் காணப்படும் பழமை வாய்ந்த ஆறு மரங்களில் இம்மரமும் ஒன்றாகவுள்ளது.

இம்மரமானது கடற்கரைக்கு அழகு சேர்க்கும் மரம் மட்டுமல்லாது முனைமுருகன் ஆலயப்பக்தர்கள் தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் வரை ஓய்வெடுத்து, களைப்பாற  நிழல் கொடுத்த இம்மரத்தை வெட்டுவதற்கு நிருவாக சபையிடமோ  பொதுக்கூட்டம் கூட்டியோ அனுமதி பெறாமல் வெட்டப்பட்டது  அப்பிரதேச மக்களிடையே பெரும் விசனத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மரநடுகை மாதமாக வருடாந்தம் ஒக்டோபர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் இம்மாதத்தில் இவ்வாறான செயற்பாட்டினை யாருடைய அனுமதியுமின்றி முனைமுருகன் ஆலயத்தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்