காரைதீவு பிரதேசத்தில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு சமூகச்சுடர் விருது – ஒருவருக்கு கலைச்சுடர் விருது

லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு மற்றும் ஆர்.கே. ஊடக வலையமைப்பு இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடாத்திய பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கான தேடல் விருது விழா நிகழ்வு கடந்த சனியன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இன் நிகழ்வில் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களான திரு.சகாதேவராஜா மற்றும் கஜரூபன் ஆகியோருக்கு சமூகச்சுடர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் கதன் அவர்களுக்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்