தேவை ஏற்படும் போது மாத்திரம் பயன் படுத்துவதற்கு மலையக மக்கள் ஊருக்காயும் கரிவேப்பிலையுமல்ல

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவினை கூட பெற்றுக்கொடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சி சஜித் ஆட்சிக்கு வந்தால் 50 ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவதாக தெரிவிக்கிறது.காலம் காலமாக மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியே வந்துள்ளனர்.இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை தெரிவு செய்வதற்கு மலையக மக்கள் பாரிய அளவில் பங்களிப்பு செய்தார்கள் இன்று அரசாங்கத்தில் ஜனாதிபதியும் இருக்கிறார்.பிரதமரும் இருக்கிறார்,90 சதவீதமான தமிழ் அமைச்சர்கள் அத்தோடு பெருந்தோட்டத்துறை அமைச்சரையும் தம்வசம் வைத்துக்கொண்டு  தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகை பெற்றுககொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல. என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க எடுத்த முடிவினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13 ) பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு தோட்டத்தொழிலாளர்களை முதலாளியாக்குவோம். என தெரிவித்து மொட்டையாக்கிய வரலாறுகள் தான் உள்ளன.இதற்கு சிறந்த உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில்; உள்ள மாவுவா தோட்டத்தைக் கூறலாம். இன்று அவர்களுக்கு இறுதியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரணதரம் படித்த 23 ஆயிரம் பேரும் பட்டதாரிகள் 300 பேரும் வேலையின்றி உள்ளனர். இவர்கள் எவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஜெனிவா சென்று தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்க வேண்டும். என வலியுறுத்தினேன். தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் இல்லாமல் தொழிலாளர் சேமலாப நிதியம் , தொழிலாளர் நலன்புரி நிதியம் ஆகியனவற்றை அறவிட முடியாது. என சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.இதனை இன்றுள்ள பிரதமர் ,ஜனாதிபதி ஆகியவர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்க வேண்டும். என்று தெரிவித்த போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் 52 நாள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராகிய போது அவர் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும். என பிரதமராக இருந்து வலியுறுத்தினார்.இந்நிலையில் தான் நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

அவர் வெற்றிபெற்றால் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் அத்தோடு அரச உத்தியோகத்தர்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை , மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு ,தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்