விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சி – கிளி.யில் மேலும் ஒருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரை விளக்க மறியலில் வைத்து விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, இரு அரசியல்வாதிகள் உட்பட 12 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்