கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.. பாரிய போதைப்பொருள் ஒழிப்புக்கான தகவல் பொலிசாருக்கும், மதுவரி திணைக்களத்திற்கும் சம நேரத்தில் கிடைத்துள்ளது. ஒரே இடத்தில் குறித்தபாரியளவிலான போதைப்பொருள் கைமாறப்படப்போவதாக இரு தரப்பினருக்கும் கிடைத்த தகவலை அடுத்து இரு தரப்பினரும் Nதுடுதல் மேற்கொண்டுள்ளனர்.

மதுவரி திணைக்களத்தினர் தனியாரிடமிருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த வாகனத்தில் குறித்த நடவடிக்கைக்காக பயன்படுத்தியுள்ளனர். குறித்த கார் வகையான வாகனங்களிலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகிய நிலையில் குறிதத் வாகனத்தை பொலிசார் துரத்தியுள்ளனர். இதன்போது குறித்த வாகனம் பயணித்ததை அடுத்து பொலிசார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு வாகனத்தை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது மதுவரி திணைக்களத்தினரால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த கார் ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வெடித்த மற்றும் வெடிக்காத துப்பாக்கு ரவை கூடுகள் காணப்படுகுpன்றமை குறிப்பிடதக்கதாகும். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்