மாநகரசபையின் ஏற்பாட்டில் சிறுவர் தினக் கொண்டாட்டம். முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு

யாழ் மாநகரசபையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் நேற்று (13) SOS பாடசாலை மைதானத்தில் மாநகரசபை உறுப்பினரும், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரக் குமுவின் தலைவருமாகிய திருமதி வி. விஜயதாட்சாயினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இச் சிறுவர் தினக் கொண்டாட்டத்தில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், SOS பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்