காங்கிரஸின் தீர்மானம் எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது- நவீன் திசாநாயக்க

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமையானது, எங்களுக்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாதென அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா- கொத்மலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவீன் திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மலையகத்திலுள்ள மக்கள் அனைவரும் ஒரே குரலில் சஜித்கே வாக்களிப்பதாக முடிவு எடுத்துள்ளார்கள்.

அதேபோன்று ஏனைய பிரதேச மக்களும் சஜித் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.

ஆகவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு கூறினாலும் அவர்கள் வாத்து சின்னத்திற்கு வாக்களித்து சஜித்தைதான் ஜனாதிபதியாக ஆக்குவார்கள்.

எனவே, தலைவர்கள் சொல்வதை மக்கள் ஒருபோதும் பின்பற்ற மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்