இந்திய நிபுணர்கள் குழுவொன்று பலாலிக்கு விஜயம்

இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை(செவ்வாய்கிழமை) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்திடம் இறுதி அறிக்கையை கையளிக்கும் நோக்கிலேயே இந்த குழு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார், விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்