கலா ஓயா பெருக்கெடுப்பு – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எலுவக்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையிலும் எலுவக்குளம் சப்பாத்து பாலத்தோடு 3 அடி நீரோடை ஒன்றும் பாய்வதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மன்னார் நோக்கி பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்