எல்பிட்டிய பிரதேச சபை – உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியீடு!

எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இந்த பெயர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

அத்துடன், 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பெயர்ப் பட்டியல் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண கூறியுள்ளார்.

பெயர்ப் பட்டியலை வர்த்தமானியின் மூலம் அறிவித்த பின்னர், பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்