புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரும் கைது செய்யப்படவில்லை- அமில தேரர்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரையும் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லையென கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தம்பர அமில தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த  இராணுவ வீரர்கள் எவரையும் இந்த அரசாங்கம் கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருக்கவில்லை.

ஆனால், அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டாபய கூறினால், அதற்கான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, அவர் வெளிப்படுத்தினால், நான் அரசியல் நடவடிக்கையிலும் இருக்கமாட்டேன். இந்த பூமியிலும் நிச்சயம் இருக்கமாட்டேன். மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் இதற்காக குரல் கொடுக்கவில்லை.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ள கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஆகையால் , இத்தகைய ஒருவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சட்ட ஆட்சி கேள்விக் குறிய ஒன்றாக மாறும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்