வவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

வவுனியாவில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளிலேயே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியை மறித்து பரல்கள் அடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியாவில் உள்ள தேவாலயங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியாவில் மக்கள் பதற்றத்துடன் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்