தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் குறித்த அறிவிப்பு வெளியானது!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கொள்கை பிரடனங்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், முழுமையான கொள்ளை பிரகடனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிரமாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்