வாக்குச்சீட்டுக்கள் 6ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு!

வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அரச அச்சகத்தால் தற்போது இதற்குரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்