பதுளை மாவட்டத்துக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹல்துமுல்ல, பசறை மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஹாமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என்பதால் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்