யாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு!

சீரடி சாய் பாபாவை போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய ‘மடத்தார்பதி வாழ் மன்னவனே’ எனும் இசைப்பேழை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுவட்டை வெளியிட்டார்.

ஈழத்துக் கவிஞர் வேலணையூர் பா. சசிகுமாரின் பாடல் வரிகளுக்கு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அக்னி கணேஸ் இசையமைத்துள்ளார். அத்துடன் ஐயப்பதாசன், பிரபாகர், ராகுல், தீபிகா, பவன், அபர்ணா, சந்திரஜோதி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்

இந்த நிகழ்வில் சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா, யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ,வலம்புரிபத்திரிகை ஆசிரியர் விஐயசுந்தரம் உட்பட பெருமளவான சீரடி சாய் பக்தர்களும் கலந்து கொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்