செஞ்சோலையின் வலிகள்’ காணொளி பாடலின் இறுவெட்டு வெளியீடு

‘செஞ்சோலையின் வலிகள்’ காணொளி பாடலின் இறுவெட்டு வெளியீடு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில், பாடலாசிரியர் வவுனியூர் ரஜீவன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டதுடன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முத்தமிழ் கிரியேஷன் தயாரிப்பில் வவுனியூர் ரஜீவனின் வரியில் பி.எஸ்.விமலின் இசையில் உருவான இந்த காணொளி பாடல் செஞ்சோலை கிராமத்தில் வாழும் செஞ்சோலை குடும்பத்தின் இன்றைய நிலையை உலகிற்கு எடுத்து கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளிப்பாடலின் முதல் பிரதியினை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உங்களுக்காக குரல் கொடுக்க யார் இருக்கின்றனர் என்று கேட்டீர்கள். நாம் இருக்கின்றோம்.

இங்குள்ள பல பிரச்சினைகளை நான் அறிந்துள்ளேன். இது அரசியலிற்கான வாக்குறுதி அல்ல. உண்மையான வாக்குறுதி. எனவே இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். நான் நிச்சயமாக இவற்றை செய்து தருவேன்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்