கோட்டாவுக்கு எதிரான மனுவின் இறுதித் தீர்ப்பு நாளை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முழுமையான தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை செயற்படாதபோது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் வாதிட்டனர், அத்தோடு அந்த காலகட்டத்தில் குடியுரிமை விடயங்களை அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சு கையாண்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் தாக்கல் செய்த மனு கடந்த விசாரணையின்போது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதற்கான காரணங்கள் அடங்கிய இறுதித் தீர்ப்பை குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் நாளை வழங்கவுள்ளார்.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்ஷவை தகுதியான வேட்பாளராக அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்