கோட்டாவிற்கும் சு.க.விற்கும் இடையில் புதிய ஒப்பந்தம்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கட்சி ரீதியான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிலையில் 17 விடயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஒப்பந்தம் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் கைத்திடப்படவுள்ளது.

இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்