அரசியலமைப்புப் பேரவை நாளை கூடவுள்ளது!

அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது.

இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிரந்தர பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமித்தல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கான அனுமதியளித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிரந்தரமான பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு பேரவை அண்மையில் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்