தனித்து போட்டியிட்டால் சுதந்திரக் கட்சியால் வெற்றியடைய முடியாது – பிரதீபன்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கினால் வெற்றிபெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க, கட்சி தீர்மானித்ததாக சுதந்திரக் கட்சியின் நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சி சார்பாக வேட்பாளரை களமிறக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்தது.

எனினும் காலப்போக்கில் சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டனர்.

இவ்வாறான நிலையில் சுதந்திரக் கட்சி அரசியல் பிரமுகர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமையினால், தனித்து போட்டியிட்டால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்தது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்