கடும் காற்று – 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு

குருநாகல் மாவட்டத்தில் 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் மின்சாரக் கம்பிகளை இணைப்பதற்காக இலங்கை மின்சார சபையின் மேலதிக அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்