ஒக்டோபர் 20 இல் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல்துறை சார்ந்த 32 நிபுனர்களால்  தயாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் பங்காளி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகள் உள்ளடக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை வாழ்க்கை செலவை கட்டுப்படுத்துதல் விவசாயிகளின் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடு ஆகிய விடயங்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்