மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்து ! காரைதீவில் துயரம்…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் பலியாகின.

இவ் விபத்தானது இன்று மாலை 06மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கமநல சேவை மத்திய நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

வீதியால் இரு பசுக்கள் (தாய் – கன்று) சென்று கொண்டிருக்கையில் கல்முனையில் இருந்து நிந்தவூர் பகுதியை நோக்கி சென்ற சிறிய கப் வாகனம் பசுக்கன்றின் மீது மோதியுள்ளது.அச் சமையம் அவ்வீதீயால் அதிவேகமாக வருகை தந்த பேரூந்தானது இருபசுக்களின் மீது மோதுண்டு பேரூந்தை நிறுத்தாமல் சாரதி சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பேரூந்தை பின் தொடர்ந்த இளைஞர்கள் நித்தவூர் காரைதீவு பிரதான வீதி எல்லையில் வைத்து பேரூந்து இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.அப்போது குறித்த பேரூந்து சாரதியை பிடித்த போது சாரதி மது போதையில் இருந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிசார் பஸ் சாரதியை கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பஸ்ஸில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட மாடுகள் எதிரே மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரு இளைஞர்கள் மீது மோதுண்டதுடன் அதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி காரைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த பஸ் இயந்திரகோளாறு காரணமாக அவ்விடத்தில் நிறுத்தாவிடின் மேலும் பல உயிர்ச்சேதங்கள் எற்பட்டிருக்கும் என அவ் வீதியால் பயணித்தோர் தெரிவித்திருந்தனர்.

மேலும் சிறிய கப் வண்டி சாரதியும் அவ் விடத்தில் நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்