இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வாக்கு கேட்டதனால் அதிக வாக்குகள் பெறமுடிந்து.

2005ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மலையகத்தில் வாக்கு கேட்டதனால் தான், ஒரு லட்சத்து எழுபத்தையிரம் வாக்குகளை பெற முடிந்தது. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் இல்லாமல் 120.000 வாக்குகளால் நாங்கள் வெற்றி பெற்றோம்.ஆகக் கூடினால் 50.000 வாக்குகள் தான், வித்தியாசம் உள்ளது.இன்று தொழிலாளர் காங்கிரஸ்ஸினுள் நெருக்கடியான நிலைமை உருவாகியிருக்கிறது. அதில் உள்ள பலர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்குமாறு சாதாரண உறுப்பனர்கள் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் சஜித் பிரேமதாச அவர்களும், அவரது தந்தையும் மலையக மக்கள் பற்றிய அனுதாபமும் ஆதரவும் கொண்ட  இருவராக திகழ்கின்றனர்.
ஏழைகளின் தோழன் என்று அழைக்கக்கூடிய சஜித் பிரேமதாச அவர்கள் நம்முடைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக செயப்படுவார் என்று,  நம்பலாம்.

கடந்த மூன்று நான்கு வருட காலமாக சம்பள பேச்சு வார்த்தைகள் திடமாக நடைபெறவில்லை.எமது மக்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு போராடினார்கள.; ஆனால் அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை ஆகவே எதிர்காலத்தில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்கக் கூடிய தலைவர் தான் சஜித் பிரேமதாச அவர்கள.; ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து நுவரெலியா மாவட்டத்தில் அவரை இரண்டரை லட்சம் அதிகபடியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மலையக மக்களை பொருத்தவரையில் அன்னம் சின்னம் புதிதான ஒன்றல்ல. ஏற்கனவே இரண்டு தடைவை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்துள்ளார்கள். ஆகவே வீடு வீடாக சென்று தோட்டம் தோட்டமாக சென்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியினை வலுப்படுத்தும் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு அமைச்சர் சவீன் திசாநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாச,சுஜித் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்