தமிழ்த் தேசியத்தின் பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பொது இணக்கப்பாடு

னாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் கையெழுத்திட்டன.

யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்ற இறுதிச் சந்திப்பின்போதே இந்தப் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச ஆகிய பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என இந்தப் பொது இணைக்கப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இன்று பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் 5 கட்சிகள் கையொப்பமிட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும், ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனும்,  ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனும் கையொப்பமிட்டன.

இன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க போதிலும் இடைநடுவில் ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநடப்புச் செய்தது. அத்துடன், பொது இணைக்கப்பாட்டு ஒப்பந்தத்திலும் அந்தக் கட்சி முரண்டு பிடித்து கையெழுத்திடவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்