விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் – விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியாவில் இருந்து மீளுருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து தீவிர விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதுடன், சர்வதேச ரீதியான பணப்பறிமாற்றங்கள் குறித்த விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய பொலிஸின் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரிவின் தலைவர் புக்கிட் அமான் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சிகளை மலேசியாவில் நடத்தவும் அந்த அமைப்பை மீளுருவாக்கவும் பெருந்தொகையான பணப்பறிமாற்றங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளமை குறித்து மலேசிய பொலிஸாருக்கு தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 2 அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் கடந்த 10ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சர்வதேச ரீதியான பணப்பறிமாற்றங்கள் குறித்த விபரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய பொலிஸின் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரிவின் தலைவர் புக்கிட் அமான் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்