ஹேமசிறிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு?

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச வங்கி கணினி கட்டமைப்பை உருவாக்கும்போது இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் ஹேமசிறி பெர்ணாண்டோ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான அழைப்புக் கடிதத்தை, சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஊடாக அவரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்