கல்முனை ஆதார வைத்தியசாலையில், மாணவ கட்டுரையாளர்கள் தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டனர்.

இளம் தலைமுறையினரே நாளைய தலைவர்கள் என்ற உண்மையை அறிந்த, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்களின், பல்துறை வளர்ச்சி பரிமாணங்களில் ஒன்றாக மாணவ செல்வங்களை சுகாதார ரீதியாகவும், திடமான ஆரோக்கியம் கொண்ட, நற்பிரஜைகளாக  உருவாக்கும் திட்டமாக,  பிரதேச மட்டத்தில் மாணவர்களுக்கான சுகாதார கட்டுரைப்போட்டி சுகாதார வாரத்தை  ஒட்டி நடாத்தப்பட்டுள்ளது.

இதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 14/10/2019 அன்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக

தி ஜே அதிசயராஜ் (பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு) அவர்களும்

சிறப்பு அதிதிகளாக அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு அதிபர் கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி கல்முனை.

செ கலையரசன் அதிபர் உவெஸ்லி உயர்தர பாடசாலை கல்முனை ஆகியோரும்

கௌரவ அதிதிகள்

அக்கரை பாக்கியன் (ஓய்வு பெற்ற அதிபர்)

டி பென்சமின் (ஓய்வு பெற்ற அதிபர்)  ஆகியோருடன்

வி ரி சகாதேவராஜா வலயக்கல்வி அதிகாரி, ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ர ஊடகவியலாளர் அவர்களும்

பேரின்பராஜா அதிபர்,

ஊடகவியலாளர் அவர்களும்

பு. கேதீஸ் (கல்முனைநெற் முக்கியஸ்தர்) அவர்களும்  கலந்து சிறப்பித்துள்ளனர்.

கலை நிகழ்வுகளும் மாணவர்களினால்  நடத்தப்பட்டுள்ளது.

அதிதிகள் அனைவரினாலும், மாணவர்களுடன் சேர்த்து வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி  இரா முரளீஸ்வரன் அவர்களும் பாராட்டப்பட்டார்.

இதில் சிறப்புரையாற்றிய பிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்கள்

இவ்வாறான நிகழ்வுகளைப்  பார்த்து தான் அதிசயிப்பதாகவும்

வேலைப்பழுக்கள் தொடரான வைத்திய சேவைகளின் மத்தியிலும் இவ்வாறான சிந்தனைகளை எவ்வாறு பெறுகின்றார் என்பது வியப்பளிக்கின்றது  எனக் கூறியதுடன்.

நினைத்தால் முடியாத காரியம் எதுவுமில்லை என்ற உண்மையுடன்

இன்னுமொரு விடயம்  கருப்பொருளாகின்றது

அதாவது எதிர்காலத்தில் சுகாதார கல்வி அறிவின் மூலம் நோயார்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டமாகவும்

உள்ளது என கூறினார். அதிதிகளும்  வெற்றியாளர்களும்  கௌரவிக்கப்பட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்