குருநாகல் மாவட்டத்தில் 145 இற்கும் அதிக வீடுகள் சேதம்

குருநாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 145 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளிலுள்ள பிரதான மின்கடத்திகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்