இலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியாவில் 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தல் தெரிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் இருந்து 33 பேரும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 19 பேரும், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 17 பேர், மகாராஷ்ராவில் 14 பேர் மற்றும் கர்நாடகாவில் 12 பேர், டெல்லியில் 7 பேர் ஜம்மு காஷ்மீரில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹரான் ஹாசிமின் வீடியோக்களை அடிப்படையாக கொண்டே குறித்த 127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனோர் ஷாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

சஹரான் ஹாசிமின் வீடியோக்களைப் பார்த்து தாம் ஈர்க்கப்பட்டதை இவர்கள் ஒப்புக்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தால் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்