தமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையானது மிகவும் கவலையளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) நேற்று கையொப்பமிட்டுள்ளன.

இந்நிலையில் அந்த ஆவனத்தில் கையெழுத்திடாமைக்கான காரணம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி யாப்பான இடைக்கால வரைபு நிராகரிக்கப்பட வேண்டுமென அந்த சந்திப்பில் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் எந்தவொரு கட்சியும் இதனை ஏற்கவில்லை. ஒற்றையாட்சியை ஏற்பது இனத்திற்கு செய்யும் துரோகமாகும். இதனை எதிர்த்தே இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அவரது கருத்துக்கு பதிலளித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்திருந்தபோதும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்