காரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…

உலகெங்கும் இன்று அக்டோபர் 15 ம் திகதி சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று (15) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் தலமையில் இடம்பெற்றது.

அரம்ப நிகழ்வாக காரைதீவு பிரதேச சபையில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு அதிதிகளினால் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின ஊர்வலமானது பிரதேச சபையில் இருந்து காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தை சென்று அங்கு அதிதிகள் உரை விழிப்புலனற்றோரின் நிகழ்வுகள் , விழிப்புலனற்றோர் கெளரவிப்பு போன்ற நிகழ்வு இடம்பெற்றன.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் dr.சுகுணன் கலந்து சிறப்பித்ததோடு மேலும் பல சிறப்பு அதிதிகள் , விழிப்புலனற்றோர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறான ஓர் நிகழ்வை காரைதீவு பிரதேச சபையினால் நடாத்தப்பட வேண்டும் என கடந்த சபை அமர்வில் பிரதேச சபை உறுப்பினர்களான திரு. காண்டீபன் மற்றும் மோகனதாஸ் ஆகியோர் பிரேரனைகளை முன்வைத்து நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்