ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக! – மைத்திரி அவசர பணிப்புரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைச் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதி வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்குத் தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அவசர பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்