கூட்டமைப்புடன் விரைவில் பேச்சு! – மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட பின்னர் முதலாவது தடவையாக இன்று கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திரக் ஹோட்டலில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியாளர்களை அவர் சந்தித்தார். இதில் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இதுவரை பேச்சுகளை முன்னெடுக்க வரவில்லை” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனைத்துத் தரப்பினருடைய தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அவர்களது கொள்கைள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஆதரவு தொடர்பாகத் தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என கோட்டாபய முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்