மஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா ஆதரவு வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, “தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான முரண்பாடுகளை எம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்தமுடியாது. அவ்வாறிருக்க இலங்கையின் நிலப்பரப்பை சீனாவுக்கு விற்பனை செய்வதன் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்து எத்தகையது என்பதை தேசப்பற்றாளர்கள் போன்று பேசுகின்ற மஹிந்த ராஜபக்ச தரப்பு சிந்தித்துப் பார்க்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

எமது சந்ததி கட்சி, இலங்கை தேசிய செயற்திட்டம், தேசிய மக்கள் முன்னணி, தேசிய மலையக முன்னணி, எங்கள் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளன என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்