சுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்

சுதேச மருத்துவ அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் அமுல்படுத்தும் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்ட விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் அதன் வைத்தியப் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தலைமையில் இடம்பெற்றது.

தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வும், இலவச மருத்துவ சிகிச்சையும் வைத்தியசாலையின் IBG ( ilaj Bil iza) பிரிவில் நேற்று (15) காலை 8.30 மணி தொடர்க்கம் மதியம் 1.00 வரை இடம்பெற்றது. இந்த தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வினை வைத்தியப் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ், சமூக நல மருத்துவர் எம்.ரீ.அமீரா, வைத்தியர் எஸ்.எம்.றிசாத் ஆகியோரினால் நிகழ்த்தி வைக்கப்பட்டன.

இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நதீறா, வைத்தியர் ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, பரிசாரகர்களான ஏ.ஆர்.எம்.றிம்ஸான், எம்.பி.பௌசியா, ஏ.ஜி.பாஹிம் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்கள் இந்த இலவச மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு அங்கு இடம்பெற்ற இலவச மருத்து சிகிச்சையை பெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வைத்திய சிகிச்சைகள் வார நாட்களில் முதல் நாளான திங்கட் கிழமைகளில் இடம்பெறவுள்ளதாகவும், இந்த சிகிச்சையின்போது நோயளர்கள் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவ சிகிச்சைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களுக்கான மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் இதன்போது தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்