விஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் இன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலரே சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்