காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மழையுடனான காலநிலை காரணமாக காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளது.

காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசன பொறியிலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் அதன் வான்கதவுகள் தாமாக திறந்து கொள்ளும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தினை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுருத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்