அனைத்து முஸ்லிம் மக்களும் கோட்டாபயவிற்கு வாக்களிக்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே

கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை வெகுவாக எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

முஸ்லிம் இன ஜனாதிபதி சட்டத்தரணிகள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்