சு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முழுமையான ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேற்பகுதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தால் கூட, கீழ் பகுதி அனைத்தும் எம்முடன் தான் இருக்கின்றன.

இதனை நாம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மக்களுக்கு நிரூபிப்போம். இப்போதே அதனைக் கூற மாட்டோம்.

எல்பிட்டிய தேர்தலில் கூட சுதந்திரக் கட்சிக்கு 10 வீதமான வாக்குகள் கிடைத்திருந்தன.

அங்கு களமிறங்கிய வேட்பாளர்கள் நினைந்திருந்தால் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்திருக்கலாம்.

ஆனால், அப்படி நடைபெறவில்லை. இதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்