ஈஸ்டர் தாக்குதல் – முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழு நியமனம்!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் ர்.ஆ.டீ.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவிற்கு இதுவரை 65 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்யும் முறை குறித்து ஆராய்வதற்காக இன்று(புதன்கிழமை) ஆணைக்குழு கூடவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்குய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் 22ஆம் திகதி ஐவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் பலர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்