அருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்!

அருவக்காடு குப்பை மேட்டிற்கு குப்பை கொட்டப்படுவதை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செயற்திட்டம் வெற்றிகரமற்றதும் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததுமான திட்டம் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் நேர்காணலின்போது கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த செயற்திட்டத்தை சுட்டிக்காட்டி சில அமைச்சர்கள் கப்பம் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரூபசிங்க கொழும்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.

இவ்வாறான கருத்து மூலம், மாநகர சபைக்கு உட்பட்ட குப்பை பிரச்சினைக்கு கொழும்பு மாநகர முதல்வரிடம் உரிய தீர்வு உள்ளமை புலப்படுவதாக அந்த அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் அருவக்காடு குப்பை மேட்டில் கொழும்பு மாநகர சபையின் குப்பை ஏற்கப்படமாட்டாது என அந்த அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்