யாழ் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க இன்று யாழ் வருகிறார் பிரதமர் ரணில்…!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­கின்றார் . இன்றும், நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார்.

நாளை யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையதிறப்பு விழா­விலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்ளார். இன்­றைய தினம், வட­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்ட ஆரம்ப நிகழ்­வு­க­ளிலும் அவர் பங்­கேற்­க­வுள்ளார்.இன்றும் நாளையும், பிற்­ப­கலில் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் பிர­தமர் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.இத­னை­விட, ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்க்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெறு­வது தொடர்பில், கட்சிகளின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்