கொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு

கொழும்பு – மட்டக்குளியில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவலை பொலிஸார் மறுத்துள்ளனர்.

எனினும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர் குவிந்தமையினால் அங்கு பதற்றமான நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – மட்டக்குளியில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் பரவின.

எனினும் அவ்வாறு குண்டுகள் எவையும் மீட்கப்படவில்லையென்றும் இந்த தகவல் வதந்தியென்றும் பொலிஸ் தலைமையம் அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும் குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களும் அங்கு குழுமியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மட்டக்குளி பகுதியில் வாகனம் ஒன்று நீண்ட நேரம் சாரதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியதாக கூறப்படுகிறது.

எனினும் சந்தேகத்துக்கிடமான எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லையென பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்