ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வின் பின்னரும் சிறப்பு பாதுகாப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் ஓய்வின் பின்னரும் வசிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென தெரிவித்தே இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஓய்வின் பின்னரும் வசிக்க அனுமதிக்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்