கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

தி/கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கான நிழற்படப் பிரதி (Photo copy machine) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (16) பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் முஸம்மில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் ஆகியோர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்