முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக
வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு ஸ்ரீரங்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்காவுடன், ஓய்வு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை நீதிமன்றிலை முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இடம்பெற்ற விபத்தில், ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த வேளையில் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார்.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீரங்கவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்களை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்