ஐ.தே.கவின் கைக்கூலியாக செயற்படுகிறார் சந்திரிகா! – வீரகுமார திஸாநாயக்க சாடல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும், சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்ற அமைப்பின் மூலம் கோட்டாபயவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியே செய்து மேற்கொண்டு வருகின்றது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் யாருடைய தனிப்பட்ட தேவைக்காகவும் செயற்பட முடியாது. கட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு சிலர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையவை அல்ல. அவ்வாறு கட்சியைப் பாதுகாப்பதாக இருந்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதனை விடுத்து வேறு வழிகளில் செல்ல வேண்டிய அவசியமில்லை” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்